ஜெருசலேம் கவர்னர் கைது!- இஸ்ரேல் பொலிஸார் அதிரடி

ஜெருசலேம் கவர்னர் அத்னன் காயித்தை இஸ்ரேல் பொலிஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

ஜெருசலேம் கவர்னராக அத்னன் காயித் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பெயித் ஹனினா நகரில் இருந்து ஆக்கிரமிப்பு ஜெருசலேமின் வட பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை இஸ்ரேல் பொலிஸ் படையினர் 3 கார்களில் சென்று வழி மறித்தனர். அதைத் தொடர்ந்து கவர்னர் அத்னன் காயித்தை போலீஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்துக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.

அத்னன் காயித் கைது செய்யப்பட்டதின் பின்னணி என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

முன்னதாக ஜெருசலேமில் பாலஸ்தீன உளவுத்துறை தலைவர் ஜிகாத் அல் பாகிஹ், தனது பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அல் ஜூதெய்ரா கிராமத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஜெருசலேமுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். இவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதுவும் அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *