ஐ.நாவின் உத்தரவு!-கொந்தளிக்கிறார் கோத்தா
போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதானது, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இந்த அரசாங்கம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“போர்க்காலத்தில்கூட ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது. எனினும் தற்போது அவ்வாறான நிலை இல்லை.
அனைத்துலக சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு இருக்கிறதெனின், இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்படுவதை சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏன் தடுக்க முடியவில்லை?
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால், இந்த அதிகாரி வேண்டாமென்றால் அனைத்து படையினரையும் திருப்பி அனுப்புங்கள் என ஐ.நாவிடம் நாங்கள் கூறியிருப்போம்.
ஆனால், இன்று இலங்கை ஜனாதிபதியே, பிரதமரோ எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.