இன்றைய இராசி பலன் – 16.10.2018

இன்றைய இராசி பலன் – 16.10.2018 (செவ்வாய்க்கிழமை)

மேஷம்
எண்ணங்கள் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். இடமாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்
சச்சரவுகள் தீரும் நாள். சகோதர விரோதம் அகலும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். காலை நேரம் கலகலப்பாக அமையும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கடகம்
வரவும் செலவும் சமமாகும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

சிம்மம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.

கன்னி
குடும்பச் சுமை கூடும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.

துலாம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபாரப் போட்டிகள் அகலும். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருள் வரவு கூடும். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும் நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மகரம்
பணவரவு திருப்திதரும் நாள். பக்கபலமாக நண்பர்கள் இருந்து உதவி செய்வர். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டு. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கும்பம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும்.

மீனம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. அலுவலகப் பணிகளில் இருந்த தாமதம் அகலும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *