‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை – வைரமுத்துமீது மற்றுமொரு பெண்ணும் முறைப்பாடு!

வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பாடகி  சின்மயி குற்றம்சாட்டியுள்ள நிலையில், வைரமுத்து மீது மற்றுமொரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்துபாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில்-  ஐஸ்வர்யா என்பவரது டுவீட்டை ரீடுவிட் செய்துள்ளார். அதில் பேசிய பெண், தன்னுடைய தோழிக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார். அந்தக் குரல் பதிவில் கூறப்பட்டதாவது:

‘ஹலோ வைரமுத்து அவர்களே.. நீங்கள் எனது குரலைக் கேட்டதும் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கும். நான் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற விஷயத்திற்கு வரவில்லை.

ஆனால், எனக்கு நல்லா தெரியும் நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க. நான் என்னுடைய தோழிக்காக இப்ப பேசுறேன். அவளுக்கு வயது 24. நீங்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது, எல்லோரும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.

அப்போது எனது தோழியும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அந்த நேரத்தில் நீங்கள் அவளுடைய போன் நம்பரை கேட்டீங்க. அவளும் அப்பா ஸ்தானத்தில் உங்களை வைத்து போன் நம்பரை கொடுத்தாள்.

ஆனால், அன்றிரவு நீங்கள் எனது தோழிக்கு போன் செய்து எவ்வளவு அநாகரீகமாக கவிதை சொன்னீர்கள் என்று தெரியுமா. உங்களுக்கு தெரியும். அந்தக் கவிதை சொன்னால் உங்களுக்கு தெரியும். அதை சொல்லுகிறேன் கேளுங்க.. ‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை” இந்தக் கவிதை உங்களுடையதுதான். அதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *