யாழில் காணாமல்போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதிக்கருகில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 வயதான அமீர் அரூஸ் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் தனது நண்பர்கள் இருவருடன் யாழ். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் அணில் பிடித்து கொண்டிருந்த பின்னர் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு தனியாக அச்சிறுவன் அணில் ஒன்றைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் அவர் காணாமல்போயுள்ளார்.
சிறுவனைக் காணவில்லை என அவரது பெற்றோர் தேடிய நிலையில் இறுதியாக குறித்த உறவினரின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்த சிறுவனின் சடலம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து மரண விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.