உலக பொருளாதாரக்கட்டமைப்பில் திருத்தம் செய்க- வல்லரசு நாடுகளிடம் மங்கள கோரிக்கை

உலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு வல்லரசுகளிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

உலக பொருளாதாரம் பரந்த அடிப்படையில் வளர்ச்சி கண்டாலும், அதன் எதிர்மறைத் தாக்கங்களால் வளர்முக நாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் இடம்பெறும் சர்வதேசக் கூட்டத்தொடர்களில் அவர் உரையாற்றினார்.

இங்கு ஜி-24 நாடுகளின் அமைச்சர் மட்ட மாநாடு நடைபெறுகிறது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத் தொடர்களும் ஏற்பாடாகியுள்ளன.இந்தக் கூட்டத் தொடர்களில் சில வளர்முக நாடுகளின் கடன்பளு பற்றி பேசப்பட்டது.

குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் எதிர்கொள்ளும் தாக்கம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.இத்தகைய நாடுகளின் கடன்பளு மொத்த தேசிய உற்பத்தி சதவீதத்தின் அடிப்படையில் 33 இலிருந்து 47 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இத்தகைய கூடுதலான கடன்பளுவானது கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் தரப்புக்கள் மீது கூடுதல் தாக்கல் செலுத்துவதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *