பாராளுமன்றத்தில் நவராத்திரி பூஜை
பாராளுமன்றத்தில் வருடாந்த நவராத்திரி பூஜை மீள்குடியேற்றம்,புனர் வாழ்வளிப்பு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்இன்றையதினம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.
இந்து அலுவல்கள் அமைச்சின் பாணந்துறை கோவில் குருக்கள் ஜெகநாதன் அவர்களின் பூஜை வழிபாட்டுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது வெள்ளவத்தை தியாகராஜர் கலைக்கோவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சசிகளும் இடம்பெற்றன.
சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன்,கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்,இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன்,அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரிஎல்ல,நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹகீம், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜா,வடிவேல் சுரேஷ்,டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.