“அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!” – யாழ்.பல்கலை மாணவர்கள் மாபெரும் போராட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் போராட்டம் நடத்தினர்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட சகல அரசியல் கைதிகளையும் அரசு நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது, ‘தெற்கின் போராட்டம் ஜனநாயகம் வடக்கின் போராட்டம் பயங்கரவாதமா?’, ‘கைதிகளின் விடுதலையில் தாமதம் ஏன்’?, ‘தமிழ்த் தலைமைகள் தூங்குகின்றனவா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *