“அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு!” – அரசை வலியுறுத்தி முல்லைத்தீவில் கோஷம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

குறித்த போரட்டம் வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

“ஸ்ரீலங்கா அரசே! நல்லிணக்க அரசே! அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு!”, “அரசே இரத்துச் செய் இரத்துச் செய் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்!”, “தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்!” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனதிராஜா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்பினர், வர்த்தகர்கள், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் அரச அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *