மனம் திறக்கிறார் ‘ஓட்ட பெருசு புகழ்’ யசிகா

பிக்பாஸில் உருவான காதல் ஜோடி மஹத்- யாசிகா. ஆனால் இந்த காதல் எப்படி உள்ளே உருவானதோ அதே போல் உள்ளேயே அழிந்தும் போனது.

இந்த காதல், வீட்டினுள் நடிகர் ஹரிஷ் கல்யாண் வந்த போது தான் தீவிரமடைந்தது. ஏனெனில் அவர் தான் இவர்களுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்தினார்.

மஹத்திற்கும் யாசிகாவிற்கும் இடையே நட்பை தவிர வேறு உள்ளது என அவர் சொன்னதற்கு மஹத்தை தவிர மற்ற அனைவரும் யெஸ் என ஒத்து கொண்டனர். இதனால் மனமுடைந்த யாசிகா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

தற்போது பிக்பாஸ் முடிந்து வெளியே வந்துள்ள யாசிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அதில், அன்று மஹத் அப்படி செய்வான் என நான் சத்தியமாக நினைக்கவில்லை, ஏனெனில் ஹரிஷ் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் தான் நான் உன்னை மனதார காதலிக்கிறேன் என கூறியிருந்தார் என்றார்.

மேலும், சரி எப்படியோ அவர் வெளியே இருந்த பிராச்சிக்காக தான் இப்படி செய்து இருப்பான் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *