தினந்தோறும் 16 ஆயிரம் சிறார்கள் மரணம்! – 2 மில்லியன் பேர் வரை எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கு

உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்குமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் (01) முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானப்படி இந்த சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப் மற்றும் இதனுடன் இணைந்துள்ள யுனெஸ்கோ, சேவ் த சில்ரன் போன்ற அமைப்புகள் இத்தின த்தை மிக சிறப்பாக நடைமுறைப்ப டுத்தி வருகின்றன.

இத்தினம் ஐ, நா சபையினால் பிரக டனப்படுத்தப்படுவதற்கு முன்னர் 1925 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் சென் பிரா ன்ஸிஸ் கோவின் சீன சொலிஸ்டர் ஜெனரலாக பணியாற்றியவர் சீன நாட்டு அநாதை சிறுவர்களை ஒரு குழுவாக ஒன்றுதிரட்டி டிரகன் படகு விழாவை நடாத்தியுள்ள துடன் இதே தினத்தில் ஜெனீவாவில் பல சிறுவர் நிகழ்வுகளும் மாநாடும் இடம்பெற்றுள்ளது.

18 வயதுக்குட்பட்ட எல்லோரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றைய சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம், அவர்களின் எதிர் காலத்தை நல்வழிப்படுத்தும் வகையில் சிறப்பாக திட்டமிட்டு நெறிப்படுத்த வேண்டும்.

சிறுவர்கள் மனித சமூகத்தின் உயிர் நாடி, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். பெற்றோர், பாதுகாவலர் கள், ஆசான்கள், மதத்தலைவர்கள் இதில் முக்கிய வகிபாகமுள்ளவர்கள்.

உரிமைகள் மீறப்படாமல் நற்பிரஜை களாக வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், நற்பண்பு, நல்லொழு க்கம், நல்ல சிந்தனை ஊட்டப்பட்டு நவீன காலத்துக்கேற்றவாறு அவர்களை அறி வுள்ள கட்டமைப்புடனான சமூகமாக தோற்றுவிப்பதே சிறுவர் தினத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

1856 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் ஜூன் 1ஆம் திகதியும் நவம்பர் 20ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.

எனினும், இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக அளவில் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி,

ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள சிறுவர்களில் 16 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.

10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 2 மில்லியன் பேர்வரையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களில் 56 சதவீதமானவர்கள் சிறுமிகளாக உள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழக்கின்றனர்.

உலகம் முழுவதிலும் மரணிக்கின்ற ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதமானவர்ள் மந்த போசனத்தினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியாலன துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய வன்முறைகளில் நம் நாட்டு சிறுவர்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *