சி.ஐ.டியின் விசாரணை வலைக்குள் ரி.ஐ.டி. தலைவர் நாலக டி சில்வா!
பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிடம், சி.ஐ.டியினர் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ராஜபக் ஷ உள்ளிட்டவர்களை கொலைசெய்யும் சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புபட்டுள்ளார் என பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

“ பிரமுகர்கள் கொலை சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் பலகோணங்களில் விசாரணைகளை நடத்திவருகின்றனர். அந்தவகையில் பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும்.
நாமல் குமார என்ற நபர் சர்ச்சைக்குரிய நபராக இருக்கிறார். தற்போது இருகுழுக்குளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் வௌ;வேறு கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஆழமாக ஆராய்ந்துவருகின்றனர்.
அதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்ட பிரமுகர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைக்கவில்லை. எதுஎப்படியோ பிரபுக்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் அரசு விழிப்பாகவே இருக்கின்றது” என்றும் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் கூறினார்.