அரசியல் கைதிகள் விவகாரம் வெகுவிரைவில் தீர்க்கப்படும்! – கூறுகின்றார் விஜயகலா எம்.பி.

காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களுக்கு நல்லாட்சி அரசு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் இனவாத அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்தமையால் தான் எமது மக்கள் துன்பத்தை அனுபவித்து வந்தார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தமையால் தான் மக்கள் சந்தோசமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த மூன்று வருட காலங்களில் நல்லாட்சி அரசால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2020 வரை இந்த அரசால் மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் காலங்களில் பல தேர்தல்களுக்கு முகம் கொடுக்கவுள்ளோம். உங்களது பிள்ளைகள் சந்தோசமாக வாழ வேண்டுமாக இருந்தால் இந்த அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும்.

யுத்தத்தில் இழந்த உயிர்களை விட ஏனைய தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகவுள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல விடயங்களுக்கு இந்த நல்லாட்சி அரசு உரிய தீர்வை வழங்கவுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *