பெண்கள் இப்படியும் செய்வார்களா? எட்டுப்பேர் மடக்கிப்பிடிப்பு!

கொழும்பையும் அதனை சூழவுள்ள முக்கிய நகரங்களிலும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது – ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் உட்பட எட்டுபேர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடவத்த பகுதியில் நீண்டகாலமாக மிகவும் சூட்சுமமான முறையில் ஹேரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூவரை அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன், அப்பகுதியில் தேடுதல் வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.

அத்துடன், பொரளை, கல்கிஸ்ஸை, மட்டக்குளிய, மொரட்டுவ, மருதானை ஆகிய பகுதிகளிலும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேலும் ஐவரும் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் பெண்கள் ஈடுபட்டுவருவதுடன், சமூகவிரோதச்செயல்களுக்கும் துணைபோகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *