விருது பெற்ற சந்திரிகாவுக்கு நாமல் வாழ்த்து!
பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருதை பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் ரீதியில் எத்தகைய வேறுபாடு காணப்பட்டாலும் வாழ்த்துத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) வழங்கப்பட்டது.
இதன் மூலம், பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதைப் பெற்ற, முதலாவது இலங்கையர் என்ற பெருமையை சந்திரிகா பெற்றுக்கொண்டார்.