அடிதடியில் ஈடுபட்ட ஆசிரியைகளை உடன் இடமாற்றம் செய்க! – பழைய மாணவர் சங்கம் வலியுறுத்து

மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறைக்குள் அடிதடியில் ஈடுபட்டு, தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளன.

மேற்படி கோரிக்கை அடங்கிய மகஜர் நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையில் கையளிக்கப்பட்டுள்ளளது என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ் கிருஷ்ணராஜா தெரிவித்தார்.

கொட்டகலைப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு ஆசிரியைகள் மாணவர்கள் மத்தியில் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து அடிதடியில் ஈடுபட்டனர். இது தொடர்பில் இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் மாணவர்களுக்கு மத்தியில் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *