கொழும்பு – மட்டு. ரயில் மோதி 3 யானைகள் துடிதுடித்துப் பலி! – போக்குவரத்து பாதிப்பு

கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

புவக்பிட்டிய பகுதியில் இன்று (18) அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் மோதியதால் ரயில் தடம்புரண்டுள்ளது. இதனால், மட்டக்களப்பு வரையான ரயில் மார்க்கத்தின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதைச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *