பாகிஸ்தான் அணி வெற்றிநடை
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் ஹொங்கொங் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணித்தலைவர் அனுஸ்மன் ரத், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அனுஸ்மன் ரத் மற்றும் நிஷாட் கான் ஜோடி சிறப்பான ஆரம்பத்தை வழங்கவில்லை.அணியின் முதல் 5 விக்கெட்களும் 44 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
மூன்று வீரர்கள் ஒட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக அய்ஸஸ் கான் 27 ஓட்டங்களை பெற்றார்.
ஹொங்கொங் அணி 37.1 ஓவரில் சகல விக்கட்களையும் இழந்து 116 ஓட்டங்களையே குவித்தது.
பந்துவீச்சில் உஸ்மான் கான் 3 விக்கட்களையும் ஹசன் அலி மற்றும் ஷடாப் கான் ஆகியோர் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களிலேயெ வெற்றியிலக்கை கடந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காமல் அரைச்சதமடித்தார்.
பஹார் ஸமான் 24 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 2 விக்கட்களை இழந்து 120 ஒட்டங்களை குவித்து, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.போட்டியின் ஆட்டநாயகனாக உமர்கான் தெரிவுசெய்யப்பட்டார்.