C W மெக்கி பிஎல்சியின் ‘ஒரே இலக்கு – ஒரே படை”

CW மெக்கி பிஎல்சி யின் குஆஊபு MCG பிரிவான ஸ்கான் உற்பத்திகள் பிரிவு, 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விற்பனைக் கருத்தரங்கை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி, அண்மையில் மாறவில கிளப் பாம் ஹொட்டேலில் இடம்பெற்றது. மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இந்த நிகழ்வு இடம்பெற்றது. பயிற்சி வாய்ப்பு ஒன்றைப் பெற்றுக்கொடுத்தல், சிறந்த பெறுபேறுகளை அடைந்தவர்களை கௌரவித்தல், அடுத்த வருடத்திற்கான இலக்குகள் பற்றிக் கலந்துரையாடுதல் என்பனவே அவையாகும்.

இந்த நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், அனைவரும் காத்திருந்ததுமான அம்சம், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வாகும்.

மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய வெளிக்கள விற்பனை பிரிவு ஊழியர்கள், குறித்த நிதியாண்டுக்காக தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்குகளையும் தாண்டிச் சென்று அடைந்து கொண்ட வெற்றியை கொண்டாடுவதற்கும், ஏனையவர்களையும் ஊக்குவிப்பதற்கும் அடுத்து வரும் வருடங்களில் அவர்களையும் விருதுகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வைக்கும் நோக்கிலும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த வைபவத்தில் திரு. ரொஷான் ரண்கம – தங்க விருதையும், திரு. ஜிஹான் அதிகாரி – வெள்ளி விருதையும், திரு. கிருஷான் நளிந்த வெண்கல விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இரண்டு பிரதான நோக்கங்களுடன் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தொழில்சார் விற்பனைப் பயிற்சியும் ஊக்குவிப்பும் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி என்பனவே அவையாகும். இந்தப் பயிற்சி நெறிகள் பிரசித்தி பெற்ற பயிற்றுவிப்பாளர்களினால் நடத்தப்பட்டன. முன்னேற்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட இந்தப் பயிற்சிப் பட்டறைகளில் ஊழியர்களின் திறமைகளை விருத்தி செய்து விற்பனைக் குழுக்கள் புதிய சவால்களையும், எதிர்கால தலைமைத்துவத்தையும் அடைந்துகொள்ள வழிவகுக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருடாந்த விற்பனைக் கருத்தரங்கானது, 2018-19 ஆம் நிதியாண்டுக்கான வர்த்தக திட்டமிடலை அறிவிப்பதற்கான சிறந்த தளமாகும். இதன்போது அடுத்த வருடத்தின் எதிர்பார்ப்புக்களும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உபாய முறைகளும் கலந்துரையாடப்பட்டன. இந்த வருடத்திற்கான தொனிப்பொருள் ‘ஒரே இலக்கு – ஒரே படை” என்பதாகும்.

இந்த நிகழ்ச்சியின் போது கருத்து வெளியிட்ட C W மெக்கி பிஎல்சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மங்கள பெரேரா,

‘துரிதமாக முன்னேறி வரும் வாடிக்கையாளர் உற்பத்திப் பிரிவானது, கடந்த 3 – 5 வருடங்களில் தமது வளர்ச்சியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

அத்துடன், புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தி, மேலும் விருத்திடைய எதிர்பார்த்திருக்கின்றது” என்றார்.

2017-18 ஆம் ஆண்டு கடுமையான வெளிக்கள சூழல் நிலைகளினால் சிரமமான ஒரு வருடமாக அமைந்திருந்தாலும், முன்வரிசை ஊழியர்களின் ஈடுபாடு காரணமாக நிறுவனத்தினால் தனது இலக்குகளை எதிர்பார்த்த வகையில் அடைந்து கொள்ள முடிந்துள்ளது.

இதனால், எமது வெளிக்கள விற்பனைப் படையை இந்த சந்தர்ப்பத்தில் நான் மிகவும் கௌரவத்துடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். விற்பனை சம்பந்தமான கருத்தரங்கு கடந்த வருடத்தில் அவர்களது வெற்றிகளை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. அத்துடன், அதில் காணப்பட்ட பின்வாங்கல்களை ஆராய்ந்து அவற்றை முறியடிப்பது எவ்வாறு என்பதை அறிந்து, அனைவரும் ஒன்றுசேர்ந்து குழுமத்தின் இலக்குளை அடைந்துகொள்ள திட்டமிடுவதற்கு இதுவே சிறந்ததொரு இடமாகும்’ என்று கூறினார்.

ஸ்கான் உற்பத்திகள் பற்றி

C W மெக்கி பிஎல்சி குழுமத்தின் மிகத் துரிதமாக வளர்ந்து வரும் ஸ்கான் உற்பத்திகள் பிரிவு, உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகிய நடவடிக்கைகளை துரிமாக விற்பனையாகும் வாடிக்கையாளர் பொருட்களை சந்தையில் மேற்கொள்கின்றது.

எதிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்த இதற்கு பல்வேறு வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. சன்குயிக் பழச்சாறு, ஸ்கான் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், கொட்டகல கஹட்ட தேயிலை, ஸ்கான் ஜம்போ பீனட்ஸ், என்-ஜோய் சமையல் எண்ணெய், டெலிஷ் வர்த்தகப் பெயரிலான பேக்கரி உற்பத்திகள் மற்றும் ஜெலி கிறிஸ்டல்ஸ் ஆகியன நிறுவனத்தின் புகழ்பெற்ற சில உற்பத்திகளாகும்.

இந்த உற்பத்திகளில் அநேகமானவை, எமது தொழிற்துறையில் சந்தையின் முன்னோடியாக இருக்கின்றன. ஸ்கான் உற்பத்திகள் பிரிவானது, பல்வேறு வர்த்தகப் பெயர்கள் மற்றும் பல்வேறு விற்பனை முறைகளைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது சந்தையின் சகல மட்டங்களிலும் செயற்படும் ஒரு நிறுவனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *