அட…! இது நம்ம வாசுவா?

இலங்கையிலுள்ள முன்னணி இடதுசாரி தலைவர்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அரசியலுக்கு அப்பால் தொழிற்சங்கத் துறையிலும் இவருக்கு நிறைய அனுபவம் இருக்கின்றது. அத்துடன், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். பல ஜனநாயகப் போராட்டங்களையும் முன் நின்று நடத்தியுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஹுரோவாகவே இவர் வலம் வந்தார். தமிழ் ஊடகங்களும் இவரின் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. சிங்களவராக இருந்துகொண்டும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இவ்வாறு துணிகரமாக குரல் கொடுக்கின்றாரே என்று வியந்த தமிழரும் இருக்கின்றனர். குறிப்பாக அரசியல் மேடைகளில் அனல் பறக்க உரையாற்றினாலும் அவரது வாயிலிருந்து தகாத வார்த்தைகள் வராது.

ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வாசுவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரது அரசியல் வாழ்க்கை முழுமையாகத் தடம்புரண்டுள்ளது.

இனவாதக் கூட்டத்தோடு சேர்ந்து புதியதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இடதுசாரிக் கொள்கையும் மெல்லெனச் சாகத் தொடங்கியுள்ளது.

அத்துடன், அதிகம் கோபப்படுகின்றார். தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் முன்னணி அரசியல்வாதியாக மாறியுள்ளார். அட…நம்ம வாசுவா இப்படியெல்லாம் கதைக்கின்றார் என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் அவரது வார்த்தைப் பிரயோகம் இருக்கின்றது.

மஹிந்த அரசில் தேசிய மொழிகள் அமைச்சராக இருந்த வாசு, இன்று பேசும் மொழிதான் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *