Local

ஜனாதிபதி அனுரவிற்க்கு விமல் சவால்!

 

வாகனப்படம் காட்டாமல் முடிந்தால் எரிபொருள் பால்மா விலைக்குறைப்பு செய்துகாட்டுங்கள் – விமல் வீரவன்ச

ஆட்சிபீடம் ஏறியுள்ள அனுர குமார திசாநாயக்காவை வாழ்த்துகின்றேன் ஆனால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பது எனக்கு நன்று தெரியும்

அமெரிக்கர்களிடம் 3 வீட்டுக்கு ஒருவாகனம் உள்ளது எனது நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் வாகனம் இருக்கவேண்டும் அதுவும் குறைந்தவிலையில் 6 மாதத்துக்குள் அவ்வாகனத்தைக் கண்டுபிடித்து உருவாக்கியே ஆகவேண்டும் இல்லையென்றால் மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தார் ஹிட்லர்

அந்தநாட்டில் எல்லாவீட்டிலும் வாகனம் வந்தது

இலங்கையில் தற்போது நடைபெறுவது வெறும் படம் இதற்கு முன் கோட்டாபாய வென்றதும் சித்திரம் கீறினார், தனிவாகனத்தில் பாராளுமன்றம் சென்றார் சில்லரைக்கடையில் அமர்ந்து பரிசீலனை செய்தார் 2 வருடத்துக்குள் ஓடிவிட்டார்

இதேபடத்தை வேறுவிதத்தில் வாகனம் என்ற பெயரில் அனுர முன்கொண்டு செல்லுகின்றார் என்பதை மக்கள் புரியாமலில்லை.

இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் அனைத்து நகர்வுகளும் முறையான அனுமதியுடனும் ஆதாரத்துடனுமே நடைபெற்றுள்ளது அதில் இவர்களால் எந்தக்குறையும் ஒருநாளும் கண்டுபிடிக்கமுடியாது
அது கால விரையமே

வித்தியாசம் வேண்டுமென்றால் எரிபொருளின் விலையை 100 ரூபாவாக்குங்கள் பால்மாவின் விலையை 300 ரூபாவாக்குங்கள் உங்கள் திறமையை மக்கள் கண்டுகொள்வார்கள்

இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 58 வீதமான மக்கள் உங்கள் செயற்பாட்டை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்

இதேபடம் தொடருமானால் பாராளுமன்றத்தில் 50 ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading