Local

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க..?

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விரைவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வௌியாகும் சாத்தியம் உள்ளது.

அதன் பிரகாரம் அடுத்த வருட முற்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை விட்டும் வௌியேறி விடுவார். பெரும்பாலும் அவர் வேறொரு நாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரணிலின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் மிக விரைவில் வௌிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த காலங்களில் அவர் பல்வேறு வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகைதரு பேராசிரியராக (விசிட்டிங் புரோபசர்) கடமையாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக பொறுப்பேற்க முன்னதாக ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் ராஜினாமாச் செய்யவுள்ளார். அதன் பின்னர் ருவன் விஜேவர்த்தன, தலதா அதுகோரளை, அகில விராஜ் ஆகியோர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading