Local

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சாய்ந்தமருது பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை!

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியின் கீழ், நாட்டில் இன ஐக்கியம், சுபீட்சம் ஏற்பட்டு, வளமான நாடு உருவாகும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட துஆப் பிரார்த்தனை நிகழ்வு (23) இன்று திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்
கல்முனை தேர்தல் தொகுதி இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் அடிமட்டப் போராளிகள், இளைஞர்கள், பொதுமக்கள், ஜமாஅத்தார்கள் எனப் பலரும்
துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டு, மனமுறுகி துஆ இறைஞ்சியதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading