Features

மனித குலத்தின் இரகசியங்களைப் பாதுகாக்கும் 5D நினைவுப் படிவம் அறிமுகம்!

இன்னும் சில காலங்களுக்கு பிறகு மனித இனம் அழிந்துவிடும் என்பதை நீங்கள் புனைக்கதைகள் மூலமாக கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என வாதிடுபவர்களும் உள்ளனர்.

இருப்பினும் தற்போது புவி மாற்றங்கள்  மனித இனம் அழிவதற்கான வாய்ப்புள்ளதை காட்டுகின்றன. ஒருவேளை  இந்நிகழ்வுகளால் மனித இனம் அழியுமானால் அவற்றை மீட்டெடுக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, விஞ்ஞானிகள் மனித இனத்தை காப்பாற்ற ஒரு புதிய திட்டத்தை வைத்துள்ளனர். மேலும் இந்த ரகசியம் ‘5D நினைவக படிகத்தில்’ உள்ளது என்று கூறுகிறார்கள்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, முழு மனித மரபணுவையும் ஒரு படிகத்தில் வெற்றிகரமாக சேமித்து வைத்துள்ளது, மேலும் இதனால்  மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்க ஒரு வரைபடத்தை வழங்க முடியும் என்று கூறுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த புரட்சிகர தரவு சேமிப்பு வடிவம் பில்லியன் கணக்கான ஆண்டுகள் உயிர்வாழ முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் சிதைவடையும் மற்ற தரவு சேமிப்பக வடிவங்களைப் போலல்லாமல், 5D நினைவக படிகங்கள் 360 டெராபைட் தகவல்களை அதிக வெப்பநிலையில் கூட பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு இழப்பின்றி சேமிக்க முடியும்.

இது 2014 ஆம் ஆண்டில் மிகவும் நீடித்த தரவு சேமிப்புப் பொருளுக்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading