Local

ரணிலை ஆதரிக்க போட்டியிலிருந்து விலகும் நாமல்?

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 21ஆம் திகதி) நடைபெற உள்ளது.

கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் பிரச்சாரக் கூட்டங்கள் நிறைவடைய உள்ளதுடன், மௌனக்காலமும் ஆரம்பமாக உள்ளது.

19 மற்றும் 20ஆம் திகதிகள் மௌனக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, தேர்தல் போட்டியிலிருந்து விலகி ஜனாதிபதியும் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தொடம்பஹல ராகுல தேரர் பரபரப்பான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளதாகவும் தொடம்பஹல ராகுல தேரர் கூறியுள்ளார்.

நாரஹென்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துக்கான பதில்கள் எதனையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading