Local

அநுர ஜனாதிபதி – பெண் பிரதமர்: 4 பேர் கொண்ட புதிய அமைச்சரவை

(National People’s Power) அரசாங்கத்தில் 4 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அத்துடன், செப்டெம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அநுர (anura kumara) ஜனாதிபதியான பின்னர் கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்மன் நிபுனாராச்சி புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்படும்.

அநுர ஜனாதிபதி - பெண் பிரதமர்: 4 பேர் கொண்ட புதிய அமைச்சரவை | Anura National Peoples Power Cabinet Ministers

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் 4 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கலாம், ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார், அது ஒரு பெண்ணாக இருக்கலாம்.

சுவிட்சர்லாந்தில் ஏழு பேர் கொண்ட அமைச்சரவை மட்டுமே இருப்பதாக சுட்டிக்காட்டிய விஜித ஹேரத், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை இரண்டு மாதங்களுக்கு இயங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த கலாநிதிகள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என பல தொழில் வல்லுநர்கள் தமது கட்சியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading