Sports

அன்று சிறந்த பந்துவீச்சாளர் இன்று மெனேஜர் மாறிப்போன வாழ்க்கை!

 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த நேதன் பிராக்கன், மொத்தமாக கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகியது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நேதன் பிராக்கன் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும்,. 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன், 2001 முதல் 2009 வரை ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ந்து விளையாடியவர்.

தனது அபார திறமையின் காரணமாக நேதன் பிராக்கன் ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார். பிரெட் லீ, மெக்ராத் உள்ளிட்டோருடன் இணைந்து சிறப்பாக செயல்பட்ட இவர், தனது ஸ்விங்கால் பல்வேறு அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார்.

ஆனால் எல்லா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் வரும் காயம் தான் பிராக்கனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்த போதும், அவரால் பழைய மாதிரி சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதேபோல் ஐபிஎல் தொடரில் 2011ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாட ரூ.1.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பிராக்கன் வரவில்லை.

இதன்பின் நேதன் பிராக்கன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக விலகிய நேதன் பிராக்கன், தற்போது நியூ சவுத் மேல்ஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 47 வயதாகும் நேதன் பிராக்கன், கடந்த ஆண்டு அரசியலிலும் குதித்தார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான வீரேந்தர் சேவாக்கை அதிகமாக அச்சுறுத்திய பவுலர்களில் நேதன் பிராக்கனும் ஒருவர். 2018ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒன்றில், நேதன் பிராக்கனி எதிர்கொள்ள சேவாக் விரும்பியதில்லை என்று கூறியிருந்தார். அவர் தற்போது கிரிக்கெட் களத்தில் பயிற்சியாளராக கூட பணியாற்றாமல், விலகி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading