World

உலக நாடுகளுக்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை!

உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சமீப காலமாக தமது தூக்கத்தை தொலைக்க வைத்த இரு விடயம் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக காலனிலை பேரழிவுகள், சைபர் தாக்குதல்கள் தொடர்பில் பில் கேட்ஸ் தொடர்ச்சியாகவும் வெளிப்படையாகவும் எச்சரிக்கை விடுத்து வருபவர். ஆனால் சமீப காலமாக தமது தூக்கத்தை தொலைக்க வைத்த இரு விடயங்கள் போர் மற்றும் பெருந்தொற்று என குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ் | Bill Gates His Concern Another Pandemic

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தெரிவிக்கையில், சமீபத்திய உலகளாவிய சஞ்சலமான நிலை மிகப் பெரிய போர் ஒன்றிற்கு வழிவகுக்கலாம் என எச்சரித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளால் ஒருகட்டத்தில் மிகப் பெரிய போர் சூழலையும் தவிர்க்கலாம். ஆனால் மிக மோசமான பெருந்தொற்று உலக நாடுகளை மீண்டும் ஸ்தம்பிக்க வைக்கப் போவதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகளில் அது உலக நாடுகளை மொத்தமாக உலுக்கும் என்றார். தற்போதைய முதன்மையான கேள்வி என்பது எதிர்காலத்தில் ஏற்படும் சாத்தியமுள்ள தொற்றுநோய்களின் போது, ​​​​கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்ட நாடுகளின் நிலையை விட தற்போது சிறப்பாக தயாராக உள்ளனவா என்பதுதான் என்றார்.

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ் | Bill Gates His Concern Another Pandemic

மேலும், கோவிட் பெருந்தொற்றின் போது உலக நாடுகளுக்கு அமெரிக்கா முன்மாதிரியாக செயல்படும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அமெரிக்கா தடுமாறியதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்றில் இருந்து பல நாடுகள் பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், ஆனால் அவை போதுமானதாக இல்லை என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிலை மாறலாம் என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading