Local

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம் நாளை!

மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதம் நாளை (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த விவாதம் அனைத்து முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், 200க்கும் மேற்பட்ட சமூக ஊடக நெட்வொர்க்குகளிலும் 3.00 முதல் 5.00 வரை நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதன்படி ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ஷ மற்றும் பி. அரியநேத்திரன் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் பிரசாரக் கூட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் பங்கேற்பது கடினம் என்று ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு எழுத்து மூலமாக தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading