Jobs

இலங்கையை வலுவூட்டும் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO, இலங்கைச் சந்தையில் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
25kVA, 30kVA, 35kVA, 40kVA, 50kVA, 62.5kVA, 82.5kVA, 100kVA, 125kVA மாதிரிகளில் அமைந்த GenVoltz மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேட்டர்கள்), கட்டடங்களின் பராமரிப்பு சேவைகள், சுகாதார சேவைகள், சுற்றுலா, தொழில்நுட்பம் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தயாரிப்பாகும். இந்த மின்பிறப்பாக்கிகளின் விசேட செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகியன, அவற்றின் நீண்ட ஆயுளை உறுதி செய்வதோடு தடையின்றிய மின்சாரம் அவசியமான வணிகங்களுக்கு சிறந்த தெரிவாக அமைகின்றன.
இந்த அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி (வாகன பொறியியல் தீர்வுகள்) மஹேஷ் கருணாரத்ன தெரிவிக்கையில், “Tata Motors GenVoltz ஜெனரேட்டர் வரிசையை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அண்மையில் ஏற்பட்ட மின்சக்தி நெருக்கடியுயைத் தொடர்ந்து நம்பகமான மேலதிக மின்சக்தித் தீர்வுகளுக்கான தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. அந்தத் தேவையை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தீர்வே இந்த ஜெனரேட்டர்களாகும். Tata Motors நிறுவனத்தின் மேம்பட்ட பொறியியல் தொழில்நுட்பத்துடனும், DIMO நிறுவனத்தின் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவைகளுடன் சந்தைக்கு வரும் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்கள், நாட்டின் மின் உற்பத்தித் துறைக்கு புதிய ஆற்றலை சேர்க்கிறது.” என்றார்.
Tata Motors நிறுவனத்தின் CVIB Downstream Business பிரிவின் பொது முகாமையாளர் ஜே. பாத்தியா இது குறித்த தனது கருத்துக்களை தெரிவிக்கையில், “Tata Motors GenVoltz ஜெனரேட்டர்கள், இலங்கையில் நம்பகமான மற்றும் திறனான மின்சக்தி தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான தயாரிப்பு என்று கூறலாம். இலங்கையின் தொழில்துறையின் வளர்ச்சியில் Tata Motors GenVoltz முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என, நாம் எதிர்பார்க்கிறோம்.” இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், பொறியியல் தொழில்நுட்பத்தில் Tata Motors நிறுவனத்தின் நிபுணத்துவம் மற்றும் பல்வேறு சந்தைகளின் குறிப்பிட்ட தேவைகளை உணர்ந்து, அவர்கள் மேற்கொள்ளும் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மற்றும் அவர்களது தயாரிப்புகள் உள்ளூர் சந்தைக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்வதில் கொண்டுள்ள அவர்களின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களின் இயக்கச் செலவைக் கணிசமாகக் குறைப்பதற்காக, ஒப்பிடமுடியாத எரிபொருள் செயல்திறனை கொண்டுள்ளன. இதில் இணைக்கப்பட்டுள்ள வலுவான Tata Motors எஞ்சின் காரணமாக, ஜெனரேட்டர்கள் நீண்ட கால செயல்திறனையும் குறைந்தபட்ச செயலிழப்பு காலத்தையும் கொண்டுள்ளது. இந்த ஜெனரேட்டர்கள் திடீர் மின்னழுத்த அதிகரிப்பை சமாளிக்கவும், தடையின்றி செயற்படவுமான அம்சத்தை கொண்டுள்ளன. இந்த Tata Motors GenVoltz ஜெனரேட்டர்கள் புதிய CPCB II மற்றும் IV+ வெளியீட்டு விதிமுறைகளுக்கு இணங்க, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக தயாரிக்கப்பட்டுள்ளமை இங்கு விசேட அம்சமாகும்.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த ஜெனரேட்டர்கள், வணிக நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் இயங்க உதவுவதுடன், நாட்டில் ஏற்படும் திடீர் மின்வெட்டு காரணமாக எழும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
DIMO நிறுவனத்தின் மிகவும் திறமையான அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விரிவான சேவை மைய வலையமைப்பு ஆகியவற்றின் மூலம் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களுக்கு விரிவான பராமரிப்பு சேவை மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன், இந்த ஜெனரேட்டர் தொகுதியின் உதிரிப்பாகங்கள் மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு இரண்டு வருட உத்தரவாதம் அல்லது 3,000 மணிநேர இயக்க காலத்தை உத்தரவாதமாக வழங்க DIMO நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading