Local

எமது ஆட்சியில் விலைகள் குறைக்கப்படும்!

மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மின்சாரக் கட்டணம், எரிபொருள் ஆகியவற்றைக் குறைக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உணவு விலைகள் மிகக் குறுகிய காலத்தில். மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும் எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு அதன் பலன்கள் மக்களுக்குப் வழங்கும் வரை, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணி ஆணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேசிய பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, பாடசாலை அமைப்பில் உள்ள முரண்பாடுகள் அகற்றப்பட்டு, ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்கும் வகையில் பாடசாலை முறை அபிவிருத்தி செய்யப்படும் எனவும், அதற்கமைவாக ஒரு குழந்தை பாடசாலைக்கு செல்லக்கூடிய அதிகூடிய தூரம் 3 கிலோமீற்றராக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“தாய்மார்கள் காலையில் எழுந்து, குழந்தைகளுக்கு ஆடை அணிவித்து, சாப்பாடு கொடுத்து, பாடசாலை வேனில் ஏற்றுவதைத் தடுப்போம். வேனில் ஏற்றுவது அல்ல தூக்கிப் போடுறது எனலாம்.. வேனில் ஏறும் போதும் தூக்கம் இறங்கும் போதும் தூக்கம். என்ன வாழ்க்கை இது.

பாடசாலை அமைப்பில் உள்ள வேறுபாடுகளை நீக்கி, ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் வகையில் பாடசாலைகளை மேம்படுத்துகிறோம். ஒரு பாடசாலைக்கு ஒரு குழந்தை பயணிக்கக்கூடிய அதிகபட்ச தூரம் 3 கி.மீ.

பொருளாதாரப் பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும். நம் நாடு ஏழ்மையானது, இந்த நாட்டின் அரசாங்கம் மிகவும் ஏழ்மையானது, சம்பளம் கொடுக்க வழியில்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர முடியாது. கடனை செலுத்த முடியவில்லை. அந்த பொருளாதார நெருக்கடி உங்கள் சமையலறையையும் பாதிக்கிறது.

நாடு வளம் பெறும் போது அரசு வளம் பெறுகிறது, அரசு வளம் பெறும்போது நாட்டு மக்கள் பணக்காரர்களாகிறார்கள். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும்போது மக்களுக்கு உணவளிக்க வேண்டும். நாடு உருவாகி அதன் பலன்கள் பாயும் வரை வீட்டில் சமைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது. நாடு வளர்ச்சி அடையும் வரை மருந்து வாங்க காத்திருக்க முடியாது. எனவே, உணவு உண்ணவோ, மருந்து வாங்கவோ, பிள்ளைகளைப் படிக்க வைக்கவோ முடியாத குடும்பங்கள் இருந்தால், அந்த குடும்பத்துக்கு 10,000 ரூபாய் குறைந்தபட்ச உதவித் தொகையாக நாட்டின் பொருளாதாரம் சீராகும் வரை வழங்கப்படும். அதிக சிரமம் இருந்தால் 15,000 வழங்கப்படும். நாடு கட்டியெழுப்பும் வரை அவர்களின் பலமாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்…”

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading