Local

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அதிக மாத வருமானம் திலித் ஜயவீர குறைந்த மாத வருமானம் ரணில்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் கொண்ட வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆவார்.

தாயக மக்கள் கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 16,500,000 ரூபா என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. திலித் ஜயவீர இலங்கையில் ஒரு பிரபலமான வர்த்தகர் மற்றும் அவரது வணிகங்களில் ஒன்று இலங்கையில் பிரபலமான ஊடக நிறுவனமாகும்.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 1,345,000 ரூபா எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜேதாச ராஜபக்ஷ முழுநேர அரசியல்வாதி என்பதுடன், வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அத்துடன், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகக் கருதப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 454,285 ரூபா எனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மாத வருமானம் 295,681 ரூபாவாகும்.

அத்துடன், தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாவாகவும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,785 ரூபாவாகவும், மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே, 3 லட்சம் ரூபாயும் மாத வருமானமாகவும் குறித்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாத வருமானம் 179 691.66 என்றும் குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading