Local

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் 1000க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட சிறிய அளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதிக்கான வரிகளை வருடாந்தம் திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (imf) அரசாங்கம் இணக்கத்திளை தெரிவித்துள்ளதாக நிதியமைச்சு (finance ministry) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் வரிகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - வெளியான தகவல் | Vehicles Import Tax In Sri Lanka

பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதத்தின் காரணிகளுக்கு ஏற்ப இந்த வரி திருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய வாகனங்களை மாத்திரம் முதலில் இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படாத வகையில் 1000க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட சிறிய அளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading