Local

சிலிண்டர் சின்னம் – ரணில் விரும்பினாரா?:

ஜனாதிபதித் தேர்தலுக்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட விதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்தவுடன் பல விடயங்களில் ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ள சின்னம் பற்றி அதிகளவில் கேள்வியெழுப்பப்பட்டது.

ரணில் இதய சின்னம் , கப்பல் சின்னங்களில் போட்டியிடவுள்ளதாக பல கதைகள் எழுப்பப்பட்டன.

”இதயம்” என்பதை சின்னமாக்க முடியாது ஏனெனில் அது மனிதர்களுடைய வாழ்வியல் முறையில் முக்கியமான ஒரு உயிர்ப் பொருள். ஆனவே அதனைச் சின்னமாக வழங்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி ஒருவர் விளக்கமளித்திருந்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டது.

இப் பின்னணியில் சுயாதீனமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் சின்னம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்த நிலையில் நேற்று (15) மாலை அதிகாரபூர்வமாக சின்னம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரணில் விக்கிரமசிங்க சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

பல கலந்துரையாடல்களின் பின்னரே இந்த சின்னம் தெரிவு செய்யப்பட்டதாக ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2021ஆம் ஆண்டில் காணப்பட்ட வரிசை யுகத்தை மீண்டும் பொது மக்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இச் சின்னம் தெரிவு செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக இது இலகுவாக இருக்கும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading