Sports

இலங்கையிடம் தோற்றது மானக்கேடானது.. சிராஜ் எதுக்கு அணியில் இருக்காரு? ஸ்ரீகாந்த் கடும் தாக்கு



இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இழந்து இருப்பதற்கு முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடி இருக்கிறார். இலங்கை போன்ற பலம் குன்றிய அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாதது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள ஸ்ரீகாந்த், இலங்கை அணியை இந்தியா பொட்டலம் கட்டிவிடும் என்று நான் நினைத்தேன். இலங்கையை நான் பொட்டலம் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவை இலங்கை பொட்டலம் கட்டி விட்டது.

பயிற்சியாளராக ஜெயசூர்யாவின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை அணி இன்று வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஜெயசூரியா தான்.இலங்கை அணி போட்டியை எதிர்கொள்ளும் முறையில் ஜெயசூர்யாவின் தாக்கம் நிச்சயம் இருந்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லை.

ஜடேஜா இல்லை, பும்ரா இல்லை. இதனால் தான் நாம் தோற்றோம் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அப்படி பார்த்தால் இலங்கை அணியிலும் தான் நட்சத்திர வீரர்கள் இல்லை. இலங்கையின் முக்கிய வீரர்களான பதிரானா, மதுசங்கா,ஹசரங்கா போன்ற வீரர்கள் எல்லாம் இல்லாமல் தான் இலங்கை அணி இந்த தொடரில் விளையாடியது. அவர்களால் ஜெயிக்க முடியவில்லையா என்று ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று இலங்கை அணியில் புதுப்புது வீரர்கள் எல்லாம் எங்கிருந்தோ வந்து இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்தியா தடுமாறி இருக்கிறது. வெல்லாலகே போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணியை அவர்கள் காலி செய்து இருக்கிறார்கள். சிராஜ் எதற்கு அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

சிராஜ் பார்மில் இல்லாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு முறை ஆசிய கோப்பை தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு அவர் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த ஒரு செயல்பாட்டை வைத்து அணியில் இரண்டு ஆண்டுகளாக சிராஜ் நீடிக்கிறார். அந்த ஒரு போட்டியை வைத்து இன்னும் அவர் நான்காண்டுகள் அணியில் நீடிப்பார். இலங்கை அணியிடம் தோற்பதெல்லாம் மானக்கேடான விஷயம் என்று ஸ்ரீகாந்த் சாடி இருக்கிறார். 

All reactions:

1.4K

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading