ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலஅதிர்வு டோலின்ஸ்கிலிருந்து கிழக்கே 212 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளிவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
சக்தி வாய்ந்த நிலஅதிர்வு என்பதால் இரண்டாம் நிலை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்தப் பகுதியில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.