Local

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க(anura kuma dissanayaka)உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று சொத்துப் பிரகடனங்களை வழங்கியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய சொத்துப் பிரகடனச் சட்டத்தின் பிரகாரம், ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பொதுப் பிரதிநிதிகளும் சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

சட்டமூலத்தை சமர்ப்பித்த ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததோடு, இதன்படி ஒவ்வொரு வருடமும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும்.

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள் | Ranil Dinesh Sajith Anura Show Assets

முன்னர், அரசியல்வாதிகளின் சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

ஆனால் புதிய சட்டத்தின்படி, அந்த சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading