World

ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ”இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்” என கோஷமெழுப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் எனும் இஸ்லாமிய குடியரசின் பிரதேசத்தில் தியாகியாகிய இஸ்மாயில் ஹனியேயின் ரத்தத்திற்கு பழிவாங்குவது எங்கள் கடமை என ஈஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி (Ali Khamenei) தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் உடலிற்கான பிரார்த்தனைகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்குகின்றார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா ஈரான் | Middle East Tensions Hamas Haniyeh Funeral In Iran

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் அசாடி சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னர் ஹமாஸ் தலைவரின் உடல் கட்டார் தலைநகர் டோகாவிற்கு கொண்டு செல்லப்படும் அங்கு இறுதிநிகழ்வுகள் இடம்பெறும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading