Local

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில்

போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழில் முயற்சியாளர் தம்மிக்க பெரேரா,  பாவனையாளர் அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விஹாரையைச் சேர்ந்த தம்மரதன தேரர் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இது தவிர, வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரும் முன்னணியில் உள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளர் ஒருவரும் போட்டியிடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடு பிடிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading