Features

காற்று மற்றும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Protein Powder!

 

உலகில் அதிகரித்து வரும் உணவுப் பற்றாக்குறைக்கு, ஃபின்லாந்தைச் சேர்ந்த சோலார் ஃபுட்ஸ் (Solar Foods) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய தீர்வைக் கண்டறிந்துள்ளது.

இந்தப் புரதப் பொடி காற்று மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

பின்லாந்தின் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த புதிய உணவு கண்டுபிடிக்கப்பட்டதாக சோலார் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாசி வைனிக்கா தெரிவித்தார்.

இந்த புரதப் பொடி ஹைட்ரஜன் (H2) மற்றும் கார்பன் டை ஆக்சைடில் வளரும் ஒரு வகை நுண்ணுயிரிகளால் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நுண்ணுயிர் மின்சாரம் மூலம் H2 மற்றும் காற்று மூலம் கார்பன் டை ஆக்சைடை வழங்குவதன் மூலம் தொட்டிகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பின்னர் நுண்ணுயிரிகள் உலர்த்தி பொடியாக தயாரிக்கப்படுகின்றன.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த புரோட்டீன் பவுடரில் மனித உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏறக்குறைய உலர் இறைச்சியில் உள்ள அதே சத்துக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாற்றங்களால் பாதிக்கப்படும் பாரம்பரிய உணவு உற்பத்தி முறைகளுக்கு மாற்றாக இந்தப் புதிய செயல்முறை மாறும் என்று அந்த அமைப்பு நம்புகிறது.

பாலைவனங்கள், பனிப்பொழிவு உள்ள இடங்கள் உள்ளிட்ட எந்தக் கடுமையான வானிலையிலும் இந்தப் பொடியைத் தயாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.

தாவர அடிப்படையிலான உணவு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், சோலனாய்டு புரதம் ஐந்து சதவீத நிலப்பரப்பில் ஒரு சதவீத நீரைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading