World

வரலாற்றில் முதன்முறையாக குவைத்தில் மின்வெட்டு

வரலாற்றில் முதன்முறையாக, அதிக வெப்பநிலை காரணமாக மின்வெட்டை நடைமுறைபடுத்த குவைத் (Kuwait) அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வைத்தியசாலைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின்சார விநியோகத்தை மிகவும் திறம்பட நிர்வகிப்பதற்காக, வெப்பமான நாளின் போது இந்த தற்காலிக மின்வெட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக குவைத்தில் மின்வெட்டு | Kuwait History First Time Power Cut

இந்த மின்வெட்டு ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்களில் குவைத்தின் சில பகுதிகளில் சுமார் 50 பாகை செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading