Earthfoam நிறுவனம் தமது இறப்பர் செய்கையாளர்களின் 1900 பிள்ளைகளுக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை பைகள்,அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு!

இயற்கை இறப்பரை மாத்திரம் அடிப்படை மூலப்பொருளாக கொண்டு இறப்பரிலான மெத்தைகள் தலையணைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமான Earthfoam நிறுவனம் அண்மையில் 15 மில்லின் ரூபாய்க்கு மேல் செலவிட்டு இறப்பர் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்பு செய்யும் கருத்திட்டமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

மேற்படி கருத்திட்டத்தின் கீழ் மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த 1900 இற்கும் மேற்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு 15 மில்லியன் ரூபாய்க்கு மேலான பெறுமதியுடைய பாடசாலை பைகளும் அப்பியாசக் கொப்பிகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Earthfoam நிறுவனம் 100% இயற்கை இறப்பரை பயன்படுத்தி மேற்கொள்ளும் உற்பத்திகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.

அநநிறுவனம் தமக்கே உரித்தான செயன்முறைகள் மற்றும் தனித்துவமான இயந்திரங்களின் துணையுடன் தமது உற்பத்திகளின் நீண்ட கால பாவனை, சௌகரியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.

சுமார் 1500 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு இறப்பர் செய்கையாளர்களின் இயற்கை இறப்பர் செய்கையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் இயற்கை இறப்பரை மாத்திரம் பயன்படுத்துவதன் மூலம் உயர் தரத்திலான உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்த இந் நிறுவனத்தினால் முடிந்துள்ளது.

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ‘Fair for Life’ சான்றிதழை வென்றுள்ள முதலாவது மெத்தை உற்பத்தி நிறுவனமான Earthfoam நிறுவனம் இறப்பர் செய்கையாளர்களினதும் அவர்களின் குடும்பங்களின் நலனோம்புகை கருதியும் பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்துகின்றது. இந் நிறுவனத்திற்குச் சொந்தமான கைத்தொழிற்சாலை ஹொரணைவில் அமைந்துள்ளதோடு அவர்களின் உற்பத்திகளுக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் Hexagon Asia நிறுவனத்துக்கு சொந்தமான கைத்தொழிற்சாலை எஹேலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் மற்றும் தரச் சான்றிதழ்கள் பலவற்றை வென்றுள்ள Earthfoam நிறுவனம் எப்பொழுதும் தமது உற்பத்திகளுக்கு வேறு உட்பொருட்கள் கலக்கப்பட்ட இறப்பரை கலக்காமல் தமது உற்பத்திகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *