One Tap-ல் பணப்பரிமாற்றம்., Apple அறிமுகப்படுத்தும் புதிய AI Tools iPhone

 

இப்போது உங்கள் ஐபோனில் இருந்து மற்றொரு ஐபோனுக்கு One Tap-ல் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Apple இந்த அம்சத்தை P2P Tap to Cash என அழைக்கிறது.

இது தவிர, முதல் முறையாக call recording மற்றும் customized home screen போன்ற அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் திங்கள்கிழமை (ஜூன் 10) பிற்பகுதியில் அதன் வருடாந்திர நிகழ்வான உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC2024) பல செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்தியது.

நிறுவனம் அதன் AI அம்சங்களை ‘Apple Intelligence’ என்று அழைக்கிறது.

புதிய அம்சங்களை iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max-இல் பயன்படுத்தலாம். இது தவிர, M1 silicon chips-உடன் iPad மற்றும் Mac-கிலும் பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில், ‘Siri’ என்ற voice assistant அம்சத்தில் நீங்கள் Chat GPTஐப் பயன்படுத்த முடியும்.

நிறுவனம் அதன் அனைத்து சாதனங்களின் operating systems iOS18, watchOS11, tvOS18, iPadOS18 மற்றும் macOS Sequoia ஆகியவற்றை வெளியிட்டது மற்றும் அவற்றின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டது. இந்த நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவில் ஜூன் 14 வரை தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *