ஸ்பேஸ்-எக்ஸில் பணிபுரிந்த பெண்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு

உலகின் முன்னணி கோடீஸ்வரரும் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்ததாக அமெரிக்காவின் தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

தன்னுடைய நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், ஒரு பெண் ஊழியரிடம் தனது குழந்தைகளைப் பெற்றுத் தருமாறு பலமுறை கேட்டுக் கொண்டதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பயிற்சிக்காக வந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்திருந்தாகவும் தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களிலும் எலான் மஸ்க் ஒரு வினோதமான மற்றும் ஏற்கத்தகாத கலாசாரத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த இரு நிறுவனங்களிலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் சுலபமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தன. பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது.

அங்கு பாலியல் நகைச்சுவைகளும் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்களும் பொறுத்துக்கொள்ளப்பட்டன. புகார் அளிக்கும் பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என சில பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2013ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸில் இருந்து ராஜினாமா செய்த பெண் ஒருவர் “எலான் மஸ்க் தன்னிடம், உலக மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அதிக ஐ.கியூ. உள்ள குழந்தைகள் வேண்டும். எனவே, தன்னுடன் உறவு வைத்துக்கொண்டு தனது குழந்தைகளைப் பெறுமாறு பலமுறை கேட்டுக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண், பாலியல் உறவு வைத்துக் கொள்ள, தனக்கு ஒரு குதிரையை வாங்கித் தர எலான் முன்வந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸில் பணிபுரிந்த மற்றொரு பெண், எலான் மஸ்க் இரவில் தனது வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைப்புகள் விடுத்ததாகக் கூறி, இருவருக்கும் இடையிலான உரையாடல் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.

உயர் அதிகாரிகள் உடனான போர்டு மீட்டிங் போது எல்எஸ்டி, கோகைன், எக்ஸ்டசி போன்ற போதைப் பொருள்களைத் எலான் மஸ்க் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *