World

மோடியின் கூட்டணி ஆட்சி தொடருமா என்பதை காலம் முடிவு செய்யும்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது தார்மீக வெற்றி, நரேந்திர மோடிக்கு கிடைத்தது தார்மீக தோல்வி. ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் பெற்றவர்கள் எப்படி வெற்றியாளர்களாக கருதுவார்களோ அதுபோன்று தான் இந்தியா கூட்டணியின் வெற்றி.

ராகுல் காந்தியின் யாத்திரை இந்தியா கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஓய்ந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள், ஒதுங்கியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், மூத்தவர்களை எல்லாம் மீண்டும் களத்திற்கு கொண்டு வந்துள்ளது. எல்லா கட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைப்பது எளிதான காரியம் அல்ல. அதைவிட கடினமானது கூட்டணி அரசை நடத்துவது. இதுவரை ஒற்றை மனிதராக ஆட்சி செய்த பிரதமர் மோடி முதல் முறையாக கூட்டணி ஆட்சி செய்வதால் இந்த ஆட்சி தொடருமா என்பதை காலம் தான் முடிவு செய்யும் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, ெசார்ணா சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், மாநில செயலாளர்கள் இல.பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், முத்தழகன், மாவட்ட பொறுப்பாளர் சாமுவேல் ஜார்ஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading