Technology

நட்சத்திரம் வெடித்து சிதறுவதை வெறும் கண்களால் பார்க்கலாம்

பூமியிலிருந்து மூன்று ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பில் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும் என்றும் அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, இது ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நாசா விஞ்ஞானி ரெபெக்கா ஹவுன்செல் மேலும் தெரிவிக்கையில், “இது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு அத்தோடு இது நிறைய புதிய வானியலாளர்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளனர்.

இதனுடன், டி கொரோனே பொரியாலிஸ் கடைசியாக 1946 ஆம்ஆண்டு வெடித்ததுடன் அந்த வெடிப்புக்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த அமைப்பு திடீரென மங்கலானது.

நட்சத்திரம் வெடித்து சிதறுவதை வெறும் கண்களால் பார்க்கலாம் : விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல் | Exploding Star Will Be Visible To The Naked Eye

மேலும், கடந்த ஆண்டு டி கொரோனே பொரியாலிஸ் அமைப்பு மீண்டும் மங்கலானதுடன் இது ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும் அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading