Local

300 மில்லியன் குழந்தைகள் ஒன்லைனில் பாலியல் துஷ்பிரயோகம்

ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஒன்லைன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பலியாவதாக புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில், உலகளவில் எட்டு குழந்தைகளில் ஒருவர், அதாவது 12.6 வீதமானவர்கள் கடந்த ஆண்டில் பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் நிர்வாணப் படங்களைப் பகிர்தல் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த தரவுகளின்படி, உலகில் சுமார் 302 மில்லியன் இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

உலகளவில் 12.5 வீதமானவர்கள் அல்லது 300 மில்லியன் குழந்தைகள் பாலியல் செயல்பாடுகளுக்கான கோரிக்கைகள் உட்பட தேவையற்ற பாலியல் உள்ளடக்கம் கொண்ட இணைப்புகளை அணுகியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் புகைப்படங்களை ஒன்லைனில் ரகசியமாக வைக்க, பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கேட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading