Sports

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி

அமெரிக்க விமான நிலையங்களில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நிர்க்கதியான ஒரு நிலை நேரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

T-20 சர்வதேச உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்கும்  இலங்கை, தென் ஆபிரிக்கா மற்றும் அயர்லாந்து வீரர்கள் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

 இலங்கை அணியின் வீரர்கள் புளொரிடாவிலிருந்து நியூயோர்க் செல்வதற்கு நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி | Icc Under Fire As Teams Endure Travel Disasters

இரவு 8 மணிக்கு நியூயோர்க்கை சென்றடையவிருந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கே அவர்களினால் சென்றடைய முடிந்துள்ளது.

இலங்கை வீராகள் சுமார் ஏழு மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் நிர்க்கதியாக காத்திருக்க நேரிட்டுள்ளது.

இதன் காரணமாக மறுநாள் காலை வேளையில் திட்டமிடப்பட்டிருந்த துடுப்பாட்ட பயிற்சியை நடத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வீரர்கள் தங்குவதற்கு வழங்கப்பட்ட ஹோட்டலிலிருந்து மைதானத்திற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி | Icc Under Fire As Teams Endure Travel Disasters

எனினும் இந்திய அணிக்கு மைதானத்திற்கு அருகாமையில் ஹோட்டல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் அநேகமான போட்டிகள் ஒரே மைதானத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அவர்களினால் அதிகளவு பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்குமிட வசதிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பில்  இலங்கை, தென் ஆபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு முறைப்பாடு செய்துள்ளன.

நியாயமான முறையில் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சில அணிகள் ஓய்வின்றி பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading