DSI Tyres நிறுவனம் ஏற்பாடு செய்த Hankook டயர் விற்பனை சந்திப்பு

 

இலங்கை டயர் சந்தையின் நம்பிக்கை மிக்க வர்த்தகநாமமானDSI Tyres நிறுவனம் இலங்கை சந்தைக்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ள Hankook ரேடியல் டயர்களை உள்நாட்டுச் சந்தையில் மேலும் உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உலகப் புகழ் பெற்ற Hankook டயர் விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் கெளரவிக்கும் வைபவமொன்றை DSI Tyres நிறுவனம் RIU அவுங்கல்ல ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன் போது DSI Tyres நிறுவனத்துடன் இணைந்து  Hankook டயர்களை உள்நாட்டுச் சந்தையில் விநியோகிப்பதற்கு முதன்மை பங்களிப்பை வழங்கிய விற்பனை முகவர்களை கெளரவிக்கும் முகமாக Hankook நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் DSI Tyres நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் கையொப்பமிட்ட விஷேட சான்றிதழ்களும் அதிகாரம் பெற்ற விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டது.

உத்தரவாதத்துடனும் நம்பிக்கையுடனும் Hankook டயர்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான அறிவுறுத்தல்களும் விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *