IPL கிண்ணத்தை கைப்பற்றியது Kolkata

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரின் சேம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

சென்னை மைதானத்தில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னையை வீழ்த்தி கைப்பற்றியது. தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாதனை படைத்திருக்கிறது.

மூன்றாவது முறையாக சேம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சன்ரைசர்ஸ் பரிதாபம் | Kkr Won The Championship For The Third Time

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 2016 ஆம் ஆண்டு சேம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தியது. நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் இந்த சீசன் முழுவதும் அபாரமாக விளையாடிய நிலையில், இறுதி போட்டியில் மொத்தமாக சொதப்பினர். அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா 2 ஓட்டங்களிலும் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் ஆகியும் வெளியேறினர்.

ராகுல் திருப்பாதி தன் பங்கிற்கு 9 ஓட்டகள் சேர்க்க தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்கரன் 20 ஓட்டங்களில் வெளியேறினார். நிதீஷ்குமார் ரெட்டி 13 ஓட்டங்களிலும் தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் கிளாசன் 16 ஓட்டங்களிலும்,

மூன்றாவது முறையாக சேம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சன்ரைசர்ஸ் பரிதாபம் | Kkr Won The Championship For The Third Time

சேபாஸ் அஹமத் 8 ஓட்டங்களிலும், அப்துல் சமத் 4 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 90 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் பாட் கம்மின்ஸ் மட்டும் தனியாளாக போராடி 24 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரில் 113 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *